திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத ஆலயம் இணையதளம் உங்களை வரவேற்கிறது , இங்கு ஆலயம் சம்பந்தமான தரவுகளையும் , ஆலயத்தில் இடம்பெறும் சகல செயற்பாடுகளையும் அறியலாம் . உங்கள் கருத்துக்களை எமக்கு அனுப்புங்கள் mail@thirukkovil.com

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம். - 2011





திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவ திருவிழாவும் , தீர்த்தோற்சவமும் எதிர்வரும் 2011 - 07 - 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 2011 - 07 - 30 ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறும்.

ஈழத்து திருச்செந்தூர் என அடியார்களால் போற்றப்படுவதும் வரலாற்று புகழ் மிக்கதுமாய் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் அம்பாறை மாவட்டத்தில் தென்திசையில் அக்கரைப்பற்றிலிருந்து 8 மைல் தொலைவில் அமைந்துள்ள திருக்கோவில் எனும் திருப்பதி பல ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளை நாவற்தருவும் சுவைதரும் நீர்சுனைகளும் அமைந்துள்ள இயற்கை வளத்தோடு இயங்கியதால் வெள்ளை நாவற்பதி என்று விளங்கியதென்பர். வீரமகேந்திரபுரியை ஆட்சிபுரிந்த சூரபத்மனுடன் முருகப் பெருமான் போரிட்ட வேளை சூரனை வெல்லவென்று விடுத்த வேல் அவன் மார்பைப் பிளந்து ஆகாயக் கங்கையில் நீராடி புனிதம் பெற்று திரும்பும் வழியில் வாகூர மலையை பிளந்தது என்றும் அதன் பக்கம் மூன்று குளங்களையும் அகழ்ந்து திருக்கோவில் வெள்ளை நாவல் மரத்திலே வந்து தங்கியது. காடு சுற்றிவந்த வேடுவர்கள் வெள்ளை நாவல் மரத்திலே ஒளிவீசும் தங்க வேலொன்று பிரகாசிப்பதைக் கண்டு இலை குழைகளால் கொண்டு முருகனுக்கு அமைக்கப்பட்டிருந்த கோவிலைத் தமிழரின் இரண்டாம் படை எழுச்சியின் போது வந்த சோழநாட்டு மன்னர்களால் தென்னிந்திய சிற்பசாத்திர முறைப்படி கல்லினாற் கட்டி முடித்தனர் என்றும் வேடரது பந்தலுக்குள் வடக்கு முகமாக வீற்றிருந்த வேலானது புதிய கற்கோவிலாலும் கிழக்கு முகமாக திரும்பிவிட்ட காரணத்தினால் `திருக்கோவில்' (திரும்பிய கோவில்) என்று பெயரிட்டனரெனவும் திருக்கோவில் பற்றிய பதிகம் கூறுகிறது.


இத்திருப்பதியிலே ஆடிமாதத்து அமாவாசைத் தினத்திலே சமுத்திர தீர்த்த உற்சவம் நடைபெறும்பொழுது ஈழமணித்திரு நாட்டின் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் பக்த கோடிகள் வந்து முருகன் அருளைப் பெறுவது பண்டைய வழக்கம். இவை மதம், குலம் என்ற பேதமின்றி எல்லா மக்களும் ஆறுமுகன் அன்பென்னும் பிணைப்பினால் `அரகர' என்று கூறும் ஒலி கீழ்த்திசைக் கடலொலி போன்று முழங்கும். இக் காலத்தில் பல பாகங்களிலுமிருந்து மெய்யடியார்கள் கூட்டம் கூட்டமாக வந்து காவடி எடுப்பதும் கற்பூரவிளக்கெடுத்தல், மாவிளக்கு எடுத்தல் போன்ற திருத் தொண்டுகள் புரிந்து முருகன் திருவருளைப் பெற்றுச் செல்வார்கள்.

மூர்த்தி,தலம், தீர்த்தம் முறையே `வணங்கினர்க்கு வார்த்தை சொல்லச் சற்குருநாதன் வாய்க்கும் பராபரமே' எனும் அருள் மொழிப்படி, மூர்த்தி ஸ்ரீ சித்திர வேலவன், தலமும் கோவிலும் திருக்கோவில், தீர்த்தம் கிழக்குத் திருக்கடல் துறையும் பெற்று வளம் பெற்றுள்ளது. ஆதிகாலம் தொட்டே தமிழ் நாடு முதல் யாழ்ப்பாணம் முதலிய இடங்களிலிருந்து மெய்யடியார்கள் பாதயாத்திரையாகவே பலமாதங்கள் நடந்து திருக்கோவில் முருகன் சந்நிதி தேடிவந்து தரிசித்துப் பின் கதிர்காமத்திற்குச் செல்வார்கள்.

மட்டக்களப்பு தமிழகம் எனும் நூலினைத் தந்த மகாவித்துவான் பண்டிதர் வி.சி. கந்தையா, பழைமையும் பிரசித்தமுடையதுமான முருகன் கோவில்களைத் திருப்படை கோயில்கள் என்றும் கூறுவர். பண்டைய அரசின் மதிப்பும் மானியமும் சீர்வரிசைகளும் பெற்ற கோயில்களே திருப்படைக் கோயில்களாகும். திருக்கோவிலிலுள்ள ஷ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவில் கிழக்கில் முதலாவது திருப்படைக் கோயிலாகும். இதனை `தேசத்துக் கோவில்' என்றும் உலகிலே திருக்கோவில் என்று சிறப்பாகக் கூறும் திருநாமம் திருச்சிற்றம்பலம் என்றும் சிதம்பரத்தையே குறிக்கும். அடுத்து இலங்கை மணித்திருநாட்டின் கிழக்குத் திசையின் பாகமாக அமைந்திருக்கும் திருமுருகன் திருக்கோட்டையாகிய இந்தத் திருக்கோவிலையே குறிக்கும். திருக்கோவிலென்ற பெயர் ஊருக்கும் கோவிலுக்கும் ஒரே பெயராக அமைந்திருக்கும் தனிப்பெருஞ்சிறப்பு ஆகும்.
Read more >>

சூரன் போர் - 2010

திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுதனார் ஆலயத்தில் இடம்பெற்ற சூரன் போர் நிகழ்வின் சில புகைப்படங்கள் . மேலும் சில புகைப்படங்களுக்கு காத்திருக்கிறோம் எமக்கு கிடைக்க பெற்றதும் . இங்கே பதிவேற்ற படும் 



Read more >>

இன்று திருக்கோவில் முருகன் ஆலய கொடியேற்றம்

இன்று திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுதனார் ஆலய வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்படுள்ளது . உற்சவத்தின் போது இடம்பெறும் நிகழ்வுகளை எம்மால் இயன்றவரை உடனுக்குடன் அறியத்தருவோம் . தொடர்ந்து எமது இணையதளத்துடன் இணைந்திருங்கள் .
Read more >>

Location அமைவிடமும் அமைப்பும்

அமைவிடமும் அமைப்பும்
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் என்னும் ஊரில் இவ்வாலயம் அமைந்துள்ளது, பண்டைய நாளில் இவ்விடம் நாகர்முனை என்று அழைக்கப்பட்டது. இவ்வாலய முன்றலில் வெள்ளை நாவல் மரங்களும் நன்நீர்ச் சுனைகளும் அமைந்துள்ளன. அதனால் இவ்வாலயம் வெள்ளை நாவல்பதி என்றும் அழைக்கப்படுகிறது. நாகர்முனை, வேலூர், கந்தபாணத்துறை, ஈழத்துச் செந்தூர் எனும் பல பெயர்களால் வழங்கப்படுகின்றது.
Read more >>

கர்ணபரம்பரைக்கதை

கர்ணபரம்பரைக்கதை


சூரன் போரிலே முருகப்பெருமானது வேல் சூரனை வதம் செய்தபின் அதிலிருந்து கிளம்பிய ஓர் ஒளி வாகூர மலையை இருகூறாக்கி மூன்று குன்றங்களையும் அகழ்ந்தது. பின் வேகம் தணிந்து நாகர்முனை வெள்ளை நாவல் மரத்திலே வந்து தங்கியது. வெள்ளை நாவல் மரத்திலே ஒளிவீசும் தங்க சித்தர வேலான்று பிரகாசிப்பதைக் கண்டு வேடுவர் குதூகலித்து அவ்விடத்திலேயே ஒரு கொத்துப் பந்தலிட்டு சித்திர வேலாயுதரை வழிபடலாயினர்.


திருக்கோவில் கல்வெட்டுக்கள்
திருக்கோவிலில் மூன்று கல்வெட்டுக்களும் இன்னும் பல கல்வெட்டை ஒத்த சிதைவுகளும் காணப்படுகின்றன.

  • முதலாவது கல்வெட்டு தம்பிலுவில் அம்மன் கோயிலில் கிடைக்கப்பெற்றது. இது ஏறக்குறைய ஐந்து அடி உயர தூணாகும். அதனிரு பக்கங்களிலும் 38 வரி பொறிக்கப்பட்டுள்ளது. மற்றைய இருபக்கங்களிலும் ஒரு சூலாயுதமும், ஒரு மயிலும் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டின் ஆரம்பத்தில் சூரிய, சந்திர வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது 15ம், 16ஆம் நூற்றாண்டுக்குரியதாகக் காணப்படுகின்றது.
  • இரண்டாவது கல்வெட்டு திருக்கோவிலின் தெற்கேயுள்ள மதிலோரமாக உள்ளது. இது 2 அடி நீள அகலமான ஒரு கல்லிற் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் தமிழ் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. முன்பின் வாசிக்க முடியாதுள்ளது.
  • மூன்றாவது கல்வெட்டு கோயிலின் வாசலில் காணப்படுகிறது. இது 4 அடி உயரமும், 8 1/2 அங்குல அகலமும் உடையதாக கல்லிற் செதுக்கப்பட்டுள்ளது. இது 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
Read more >>

எதிர் வரும் 23 ம் திகதி உற்சவம் ஆரம்பம்


திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய இவ்வருட உற்சவங்கள்

எதிர் வரும் ஆடி ( ஜூலை ) 23  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் , எதிர்வரும் (ஆகஸ்ட்) ஆவணி  1 ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவுறும்.

மேலதிக தகவல்கள் விரைவில் –
இவ வருடம் ஆலயத்தில் இடம்பெற இருக்கும் அணைத்து நிகழ்வுகளும்  எமது ஆலய இணையதளத்தில் பதிவேற்ற படும் .

Read more >>

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

-க.சரவணன்- ஈழத்து திருச்செந்தூர் என அடியார்களால் போற்றப்படுவதும் வரலாற்று புகழ் மிக்கதுமாய் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய இவ்வருட உற்சவத்தில் அம்பாறை மாவட்டத்தில் முதன் முதலாக பல இலட்சம் ரூபா செலவில் செய்து முடிக்கப்பட்ட சித்திரத் தேரில் முருகன் வலம் வர இருப்பதை மிக விமரிசையாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் உற்சவம் எதிர்வரும் 12 ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவுறும்.
Read more >>

 

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் is proudly powered by THIRUKKOVIL.COM | Designed By R.Sayanolipavan